Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முட்டையே இல்லாமல் அருமையா ஆம்லெட் ரெடி!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

Omelet is ready without eggs!! Try it today!!

Omelet is ready without eggs!! Try it today!!

முட்டையே இல்லாமல் அருமையா ஆம்லெட் ரெடி!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

அசைவம் சாப்பிட விரும்பாதவர்கள் முட்டை இல்லாமல் சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.கடலை மாவை கொண்டு செய்யக்கூடிய ஒரு எளிதான ரெசிபி இந்த சைவ ஆம்லெட்.இந்த சைவ ஆம்லெட்டை சாண்ட்விச் உடன் வைத்து சாப்பிடலாம்.இவை அசல் முட்டை ஆம்லெட் சுவையை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கடலை மாவு – 1/2 கப்

*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 2(நறுக்கியது)

*கோதுமை மாவு – 1/4 கப்
அல்லது
சோள மாவு

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

*மிளகு தூள் – தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

*சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் கடலை மாவு,சோள மாவு அல்லது கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும்.பின்னர் அதில் தேவையான அளவு உப்பு,சமையல் சோடா தேவையான அளவு தண்ணீர் கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் நறுக்கிய பெரிய வெங்காயம்,நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து அதில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து தடவி கொள்ளவும்.பின்னர் கலக்கி வைத்துள்ள கடலை மாவு கலவையை ஆம்லெட் போல் ஊற்றிக் கொள்ளவும்.

பிறகு மீண்டும் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கொள்ளவும்.இறுதியாக சுவைக்காக மிளகு தூள் தூவி வெந்தவுடன் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

Exit mobile version