நாட்டில் புதிய வகை நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது நேற்று காலை 781 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை அது 900 ஐ கடந்தது. இதன் மூலமாக மிக வேகமாக இந்த புதிய வகை நோய் தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது.
இன்று காலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 961 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. 22 மாநிலங்களில் புதிய வகை நோய் தொற்று பரவி இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தலைநகர் புதுடெல்லி, மகாராஷ்டிரா, உள்ளிட்ட இரு மாநிலங்களிலும் புதிய வகை நோய்த்தொற்று கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு பரவத் தொடங்கியிருக்கிறது. டெல்லியில் 263 பேரும், மகாராஷ்டிர மாநிலத்தில் 252 பேரும், புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் 97 பேரும், ராஜஸ்தானில் 69 பேரும், கேரளாவில் 65 பேரும், தெலுங்கானாவில் 62 பேரும், இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 46 பேர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிப்படைந்து இருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் 34 பேரும், ஆந்திர மாநிலத்தில் 16 பேரும், அரியானா மாநிலத்தில் 12 பேரும், இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த புதிய வகை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த மாநிலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த புதிய வகை நோய் தொற்று பாதித்த 961 பேரில் 320 பேர் குணமடைந்து இருக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பி இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் சீரான உடல் நலத்துடன் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.