Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆம்னி பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து!.. பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்!..அதிர்ச்சியில் பொது மக்கள் !..

Omni bus and auto collide head-on in an accident!.. CCTV footage goes viral!.. Public in shock!..

நெல்லையிலிருந்து ஆம்னி பேருந்து ஒன்று  பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இது கடந்த வாரம் அதிகாலை திருப்பூரை நோக்கி வந்திருந்தது. குண்டடம் நல்லோடு அருகே வந்தபோது குண்டடம் மாட்டுச்சந்தைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணி இவருடைய வயது 42. இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.இதைப் பார்த்த சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியில் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.அதில் இரண்டு பேர் படுகாயங்களுடன் மீக்கப்பட்டு திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் முதலிபாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் நேருக்கு நேர் மோதிய இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version