Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று, சூப்பர் ஸ்டாரின் பாலிவுட் கால் தடம் பற்றி பார்ப்போமா!!

On Rajinikanth's birthday today, let's take a look at the superstar's Bollywood footprint!!

On Rajinikanth's birthday today, let's take a look at the superstar's Bollywood footprint!!

தற்பொழுதும் இவர் “படம் வெளியாகும் என்றால் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம்” பெறும். அந்த அளவிற்கு இவரது நடிப்பு ‘கூஸ் பம்சாக’ ரசிகர்களுக்கு அமையும். இந்த வயதிலும் இவரது நடிப்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்து ஆகிறது. இதற்கு காரணம் இவரது கடின உழைப்பும், இவரது ஸ்டைலும் தான். ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு இவர் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார்.

அவற்றுள் சில பதிவுகள் பின்வருமாறு,

தனுசு, சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இப்பொழுது தான் இந்தியில் படம் பண்ணுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு முன்பு ரஜினி, கமலும் அக்காலத்திலேயே இந்தி படங்களில் நடித்து வந்தனர். பாலிவுட்டில் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுடன் ரஜினி இணைந்து ‘Andhaa kanoon’ என்ற படத்தை 1983 ஆம் ஆண்டு ஹிந்தியில் நடித்துள்ளார். இந்த படம் ‘பிளாக்பஸ்டர் ஹிட்’ ஆனது இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 23 திரைப்படங்களை ஹிந்தியில் நடித்துள்ளார்.

இது போக 8 படங்கள் படப்பிடிப்பின் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. தொடர்ச்சியாக இவரது அயராத உழைப்பினாலும், விடாமுயற்சினாலும் மட்டுமே இவர் சூப்பர் ஸ்டார் ஆக இன்று வலம் வருகிறார். ஹிந்தியில் வெளிவராத அந்த 8 படங்களும் சரியாக வெளிவந்திருந்தால், இவர் பாலிவுட்டிலும் மிகப்பெரிய ‘பான் இந்தியா ஸ்டார்’ ஆக வந்திருப்பார். மேலும் இவர் நடித்த 10 இந்தி திரைப்படங்கள் இந்தி ரசிகர்களுக்கு மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version