Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரும் 27ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அண்ணாமலை!

பிரதமர் நரேந்திர மோடி 18 மாதங்களுக்குள் பொதுத்துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குப்பையே ஜூன் மாதம் வழங்கினார். நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. சொன்னதை செய்வார் பிரதமர் நரேந்திர மோடி என்று அண்ணாமலை தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதோட திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், தமிழ் மொழியை காக்க வலியுறுத்தியும் பாஜகவின் அமைப்பு ரீதியாக இருக்கின்ற 60 மாவட்டங்களிலும் வரும் 27ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கோவை மாநகரில் தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளார்கள். தலா ஒரு மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கும் விதத்தில் ஆர்ப்பாட்ட ஏற்பாடுகள் செய்யுமாறு மாவட்ட தலைவர்களை கட்சியின் மாநில தலைமை அறிவுறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version