Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாம்பதாமான ஊதியம்!! தமிழ் புத்தாண்டு காலையிலேயே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா!!

#image_title

மார்ச் மாத ஊதியத்தை கேட்டு தமிழ் புத்தாண்டு காலையிலேயே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களால் பரபரப்பு.அரியலூர் நகராட்சியில் 120 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 270 ரூபாய் வீதம் மாதம் வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியை புறக்கணித்து இன்று தர்ணா போராட்டம் நடைப்பெற்றது.

14 நாட்கள் ஆன நிலையில் சம்பளம் வழங்காததால் சிரமப்படுவதாக அவர்கள்‌ குற்றம் சாட்டினர்.இதனையறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மதுரை ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சு வார்த்தையில் நாளை சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் பணிக்கு சென்றனர்.இதனால் தமிழ் புத்தாண்டு காலையிலேயே 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version