சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வக்கீல்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் சென்னை ஜகோர்ட் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஜெயப்பிரகாஷ், நாராயணன், ஜி.எஸ்.மணி ஆகியோர் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறையில் நடந்ததை பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் இடம்பெற்ற எஃப்.ஐ.ஆர் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமாக வெளியானதையும் மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தில் கைதான நபர் மீது 20 குற்ற வழக்குகள் உள்ளதை மாநகர போலீஸ் கமிஷனர் ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும் எப்.ஐ.ஆர் வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியை சேர்ந்தவர் அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும். மேலும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். அது மட்டுமின்றி மூன்று பாலியல் சம்பவங்கள் அங்கு நடந்துள்ளது. இருபினும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது ஆனால் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் தடையின்றி உலா வருகின்ற.
கைதான நபருக்கு எதிராக வன்முறை மட்டுமே உள்ளது என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். கைதானவர் மீது பல வழக்குகள் உள்ளன அது குறித்தும் விசாரிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் 56 செயல்படவில்லை என வாதங்களை முன்வைத்து புலன்விசாரணை நடத்த வேண்டும். மேலும் கைதான நபர் மட்டுமே பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் என போலீஸ்கார் எப்படி முடிவுக்கு வந்தார் அதற்கான தேவை என்ன ஒரு வழக்கில் மட்டும்தான் ஞானசேகருக்கு தொடர்பு உள்ளர் என எப்படி முடிவு செய்தானர். நண்பருடன் இருந்தார் என குறிப்பிடுவது எல்லாம் சட்டவிரோதமாக கருதப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவியன் குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு புகார் கைதான நபரின் விவரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று தான் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். கைதான நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது அவர் தப்பி செல்ல முயற்சித்தார். அவரை விரட்டி சென்ற போது தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களும் தாக்கல் செய்யப்படும்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்ததை தைரியமாக முன்வந்து புகார் அளித்துள்ளார். அவரின் செயல் பாராட்டுக்குரியது அவரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, பாதிக்கப்பட்ட மாணவி அந்த நேரத்தில் அங்கு சென்று இருக்க கூடாது, என்பதெல்லாம் பழமை வாதம் அப்படி பேசுவது தவறான மனோபாவம் பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. குறிப்பாக காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் யார் யாருடன் பேச வேண்டும் என்பதை மற்றவர் தீர்மானிக்க முடியாது.
அது அவரவர் விருப்பம் எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தமிழக அரசு மற்றும் காவல்துறை மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைகழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்தும் நிர்பயா நீதி குறித்த விவரங்கள் குறித்தும் பல்கலைகழக விசாரணை நடத்த வேண்டும். மேலும் விசாரணை குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளது என்பது தொடர்பாக அண்ணா பல்கலைகழகம் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.