கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை… சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்!!

0
115
கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை… சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்…
கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு இரயில்களை தெற்கு  இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கேரளா மட்டுமில்லாது தமிழகத்தில் சில இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
முதல் அறிவிப்பில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேற்று(ஜூலை 31) மூன்று சிறப்பு இரயில்களுக்கான அறிவிப்பை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
எர்ணாகுளம் முதல் சென்னைக்கும் பின்னர் சென்னையிலிருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு 06046 என்ற எண் கொண்ட சிறப்பு இரயில் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதியும், ஆகஸ்ட் 31ம் தேதியும், செப்டம்பர் 7ம் தேதியும் இயங்கும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி,  செப்டம்பர் 1ம் தேதி மற்றும் செப்டம்பர் 8ம் தேதி எர்ணாகுளத்திற்கு 06045 என்ற எண் கொண்ட சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் முதல் சென்னை வரை இயக்கப்படும் சிறப்பு இரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர் வழியாக ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னையை சென்று அடையும். எர்ணாகுளம் முதல் சென்னை வரை இயக்கப்படும் இந்த சிறப்பு இரயில் கோவை மற்றும் திரூப்பூர் மாவட்டங்களில் நிற்காது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதம் 22, 29 ஆகிய தேதிகளிலும் செப்டம்பர் 5ம் தேதியும் இயங்கும் 06083 என்ற எண் கொண்ட கொச்சுவேலி-பெங்களூஇரயிலும், 06041 என்ற எண் கொண்ட தாம்பரம்-மங்களூரு இரயிலும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நின்று சொல்லும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு இரயில்களுக்கான முன்பதிவு தற்பொழுது துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.