Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடமே கொள்ளை! விரைந்து செயல்பட்ட காவல்துறை

பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடமே கொள்ளை! விரைந்து செயல்பட்ட காவல்துறை

பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த கொள்ளையன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, திருடிய பொருள்கள் அனைத்தும் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. 

பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பெண் மோடி. அவர், டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் தமயந்தி பெண் மோடி வைத்திருந்த ஹேண்ட் பேக்கை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து, தமயந்தி பெண் மோடி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்திருந்த புகாரில், அந்தப் பையில் 56,000 ரூபாய் பணமும், இரண்டு மொபைல் போன்களும், முக்கிய ஆவணங்களும் இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். அந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஆளுநர் ஆகியோரது இல்லங்களும் உள்ளன. முக்கிய தலைவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வழிப்பறி நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்நிலையில் தமயந்தி பென் மோடியின் புகாரையடுத்து, அந்த குற்றவாளிகளைப் பிடிக்க 20 குழுக்களைக் கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், தமயந்தி பென் பயணம் செய்த ஆட்டோவை அந்த இரு நபர்களும் 15 நிமிடங்களாக பின் தொடர்ந்தது தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களில், ஒருவரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 50 ரூபாய் பணத்தையும், இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு கொள்ளையனை பிடித்த காவல் துறையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version