“முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘அஜித்’ நடிப்பிலும், அதே நேரத்தில் அவருக்கு பிடித்த பைக் ரைடிலும் கவனம் செலுத்தி வருகிறார்”. இவர் தற்போது, ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் “பொங்கலுக்கு ரிலீசாகும்” என்று அறிவிக்கப்பட்டது. இவர் கடைசியாக ‘துணிவு’ படத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் நடித்திருந்தார். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் இப்படம் வருவதனால் ‘அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்பட அப்டேட்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்’.
‘ஸுட்டிங் போக மீதி இருக்கும் நேரங்களில், அவர் பைக் ரைடு செய்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே’. இவர் ”உலகம் முழுவதும் பைக் ரைட் செய்ய வேண்டும் என்பது இவரது ட்ரீம்”. “புதிய மனிதர்களின் சந்திப்பாலும், புதுப்புது இடங்களின் அனுபவத்தாலும், அவர்களின் கலாச்சாரத்தாலும் நம்மை நாமே அதிகமாக தெரிந்து கொள்ள முடியும்” என இவர் குறிப்பிட்டுள்ளார். “பயணங்களின் போது,சாதி,மத வேறுபாடு இன்றி சக மனிதர்களுடன் பழக முடியும்’ எனவும் அவர் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த கருத்துக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஈர்க்கப்பட்டது குறிப்பிட்டுத்தக்கது.
”துணிவு படப்பிடிப்பின் போது, நடிகர் சமுத்திரகனியிடம், பைக்கில் பயணம் செய்து பாருங்கள். குறிப்பாக உங்களை யாருன்னே தெரியாத இடத்திற்கு பயணம் செய்யுங்கள். உங்களைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்வீர்கள்” என பயணத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளார் அஜித்.
“வட மாநிலங்களில் அஜித் பயணம் செய்யும்போது, ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளார். அந்த கிராமங்களில் சிறு கடை கூட கிடையாது. பயண களைப்பின் காரணமாக, அங்கு இருந்த ஆடு மேய்ப்பவரின் உதவியை நாடி உள்ளார். முதலில் அந்நபருக்கு மொழி புரியவில்லை. பின்னர் சைகைகளை புரிந்து கொண்ட அந்நபர், அஜித்தை அவர் குடிசைக்கு அழைத்து சென்று, அந்நேரத்தில் அவர் வீட்டில் இருந்தால் ஒரு முட்டையை வைத்து ரொட்டியுடன் சேர்த்து சமைத்துக் கொடுத்திருக்கிறார்”. ‘பயணக் களைப்பில் சிறிதும் நடிகர் என்ற கர்வம் இல்லாது அவ்வுணவை வாங்கி பசி ஆற்றினார்’. “சாப்பிட்ட பின் காசு எடுத்துக் கொடுக்க அந்த நபரோ, ‘பசிக்கு உணவளிப்பது மனித தர்மம், அதற்கு பணம் தேவையில்லை’ என்று கூறி பணம் வாங்க மறுத்துள்ளார். ‘வந்தது பிரபல நடிகர் என்பது கூட அவருக்கு தெரியாது’.
அஜித்தின் இந்த அனுபவம் மூலம் பயணங்கள் என்பது பார்வைக்கு அழகு மட்டுமல்லாது, ஒரு தனி நபரின் உள்ளார்ந்த தேடலையும் உணர்த்துகிறது. புதிய பயணம்,புதிய நபர்கள், புதிய அனுபவம் ஆகியவை நம்மை நாமே புதுப்பிக்க வழி செய்கிறது”.