சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து போக்குவரத்து சேவைகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.
ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.போக்குவரத்து சேவைகளும் அனைத்து இடத்திற்கும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது உருமாறிய கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.ஒமிக்ரானின் துணை வைரஸானா பி.எப்.7 என கண்டறியப்பட்டுள்ளது.இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டது.மேலும் இந்த தொற்று வைரஸ் அமெரிக்கா,பெல்ஜியம்,ஜெர்மனி,இங்கிலாந்து,பிரான்ஸ், டென்மார்க் மற்றும் ஜப்பான் நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது.
இந்தியாவை பொறுத்தவரை முதன்முதலில் குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் மாதம் இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.ஒடிசாவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மொத்தம் நான்கு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மத்திய அரசு முன்னதாகவே மாநில அரசிற்கு செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி கடிதம் அனுப்பியுள்ளது.கடந்த 22 ஆம் தேதி பிரதம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்,சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அதனை தொடர்ந்து தற்போது வரையிலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பரவி வரும் நிலையில் அனைத்து விமான நிலையங்களிலும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் குவைத்தில் இருந்து வந்த பயணி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி மாநிலத்தில் புதிதாக ஒன்பது பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் கூறுகையில் புதிதாக உருமாற்றமடைந்த பிஎப் 7 வகை கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
குவைத்தில் இருந்து வந்தவருடைய சளி மாதிரிகள் ,மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அடுத்த இரண்டு வாரங்களில் அதனுடைய முடிவு தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் இந்த கொரோனா பாதிப்பு அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இருந்தாலும் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,