2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்!

0
287
#image_title

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்!

எதிர் வரும் 2029ம் ஆண்டில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவுகளை குறைக்கவும் மேலும் பிரதிநிதிகள் செய்யும் பணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வகையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செய்ல்படுத்த இருப்பதாக அறிவித்தது. இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமித்தது.

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் தலைமையிலான இந்த உயர்நிலைக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சட்ட ஆணையம் என பல்வேறு தரப்பினர் இடையே கருத்துக்களை பெற்று வருகின்றது. இக்கருத்துகளை ஆராய்ந்து மத்திய அரசிடம் உயர்நிலைக் குழு அறிக்கை சமர்பிக்கவுள்ளது.

இதையடுத்து சட்ட ஆணையம் 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்தவும் இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் புதிதாக பகுதி ஒன்றை சேர்க்கவும் மத்திய அரசிடம் பரிந்துரை செய்யவதற்காக சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும் பொழுது “ஓய்வு பெற்ற நீதிபதி ரித்து ராஜ் அவாஸ்தி அவர்களின் தலைமையிலான இந்த சட்ட ஆணையம் தான் மத்திய அரசிடம் 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய நாடு முழுவதிலும் உள்ள மாநில சட்ட பேரவைகளின் 5 ஆண்டுகள் செயல்படும் காலத்தை வந்து அடுத்த 5 ஆண்டுகளில் 3 கட்டங்களாக குறைத்து செயல்படுத்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய அந்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. மூன்று கட்டங்களில் முதல் கட்டத்தில் எந்தெந்த சட்டப்பேரவைகளின் காலத்தை 3 அல்லது 6 மாதங்களாக குறைக்க வேண்டும் என்பதை சட்ட ஆணையம் மத்திய அரசிடம் பரிந்துரை செய்யவுள்ளது.

மேலும் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்து விட்டாலோ அல்லது தீங்கு பேரவை அமைந்தாலோ பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளின் உதவியோடு கூட்டணி ஆட்சி செய்ய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். மேலும் கூட்டணி ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் எஞ்சிய காலத்திற்காக புதிய தேர்தலை நடத்துவதற்கு மத்திய அரசிடம் சட்ட ஆணையம் பரிந்துரை செய்யும்.

இது போல அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட பேரவையின் செயல்படும் காலத்தை 6 முதல் 3 மாதங்களாக மூன்று கட்டங்களாக பிரிக்கும் பொழுது தான் முதல் கட்டமாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை 2029ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைமுறைபடுத்த முடியும்.

அரசியலமைப்பு சட்டத்தில் புதியதாக சேர்க்கப்படவுள்ள பகுதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான விவரங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நிலைத்தன்மை, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான புதிய வாக்காளர் தயாரிப்பு பட்டியல் ஆகியவை குறித்த விவரங்கள் இடம்பெறும்” என்று கூறினர்.