ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

0
171

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தினால் அதிமுக கட்சி நிச்சயமாக பலிகிடா ஆகும் என்று திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

சென்னையில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் மணமக்களை வாழ்த்தினர். அதன் பின்னர் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் திருமணவிழாவில் பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பேசினார்.

இது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம் இவ்வாறு இருப்பது தான் அண்ணா கண்ட திமுக கழகம் ஆகும். யாருடைய காலிலும் விழுந்து பதவி பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு கிடையாது. சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம். அதே போல பாராளுமன்ற தேர்தலில் இந்திய நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.

திமுக கழகம் குடும்பமாக செயல்படுவது ஒரு சிதருக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. இங்கு ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்களை பார்த்து பயந்து போய் பாஜக அரசு பாராளுமன்ற கூட்டத்தை கூட்டியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதித் திட்டத்தை பாஜக அரசு தீட்டியுள்ளது. இதன் மூலமாக ஒரே அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள். அதிமுக கட்சி ஆளுங்கட்சியாக இருந்த பொழுது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்பொழுது இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றது.

ஒரே நாடு ஒரே திட்டத்தால் அதிமுக கட்சி பலிகிடா ஆகும் என்பதில் உறுதி. ஆனால் அது புரியாமல் அதிமுக கட்சி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ இல்லையோ ஆனால் கொள்ளை அடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். சட்டசபையில் ஆட்சி கவிழ்ந்து விட்டால் என்ன செய்வீர்கள். அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் காத்திருப்பீர்களா?” என்று பேசினார்.