Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை!

#image_title

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி இன்று(ஏப்ரல்5) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான சிறப்பம்சங்கள் இதோ…

* மகாலட்சுமியின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும்.

* 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நாடு முழுவதும் இலவச கல்வி வழங்கப்படும்.

* தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த மக்களின் மீது நடக்கும் துன்புறுத்தல் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் அமல்படுத்தப்படும்.

* மருத்துவப் படிப்புக்கு தற்பொழுது கட்டாயமாக இருக்கும் நீட், கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகள் எதுவும் அவசியமில்லை. மாநில அரசுகள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்யலாம். மாநில அரசுகள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்.

* இரயில்களில் செல்லும் முதியவர்களுக்கு சலுகைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முதியோர்களுக்கான கட்டண சலுகை மீண்டும் கொண்டு வரப்படும்.

* தேசியக் கல்வி கொள்கையானது மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே அமல்படுத்தப்படும்.

* விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

* யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

* உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.

* ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.

* முன்னேறிய பிரிவினரிடம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடானது அனைத்து பிரிவினருக்கும் வழங்கப்படும்.

* 100 நாள் வேலைக்குச் செல்லும் ஆட்களுக்கு கூலி 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த நாடு முழுவதும் புதிய சட்டம் இயற்றப்படும்.

* நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறை கொண்டு வரப்படாது.

* விளையாட்டில் சிறப்பாக செயல்படும் 21 வயதுக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் மாதம் 10000 ரூபாய் வழங்கப்படும்.
*

Exit mobile version