Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரை மணி நேரத்திற்கு ஒரு கோடி! கேட்ட பிரபல நடிகை!! உடனே ஒப்புக்கொண்ட படக்குழு!!!

அரை மணி நேரத்திற்கு ஒரு கோடி! கேட்ட பிரபல நடிகை!! உடனே ஒப்புக்கொண்ட படக்குழு!!!

திரையுலக நடிகர், நடிகைகள் தாங்கள் நடித்த படம் வெற்றிப் பெற்றால் சம்பளத்தை உயர்த்துவது வழக்கம். சமீப காலமாக சில முன்னணி நடிகைகள் தங்களின் சம்பளத்தை அதிகமாக உயர்த்தியுள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில், ரூ.3 கோடி வாங்கிய பூஜா ஹெக்டே தற்போது அவருடைய சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி உள்ளார் என கூறப்படுகிறது.

அந்த வரிசையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். அந்த படத்தை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

இவர் தனது சம்பளத்தை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான, ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் பெற்ற பெரும் வெற்றியின் காரணமாக ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா ராம் சரண் படத்தில் அரை மணி நேரம் வரும் ஒரு பேட்டி எடுக்கும் காட்சியில் நடிக்க ரூ.1 கோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில், நடிகர் ராம் சரண் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ராம் சரணை பேட்டி எடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகிறது, இதில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவை படக்குழு அணுகியது. அப்போது, இந்த அரை மணி நேர காட்சியில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ரூ.1 கோடி கேட்டதாகவும், படக்குழுவும் கேட்ட தொகையை தர ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version