ஓர் நாள் பள்ளி மறுநாள் விடுமுறை! கல்வித்துறையின் அடுத்த அப்டேட் இதுதான்!

0
140
One day school the next day holiday! This is the next update of the Department of Education!

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக மக்களைப் பாதித்து வருகிறது.இந்நிலையில் பள்ளிகளிலும் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் பயின்று வந்தனர்.முதல் அலையின் இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.ஆனால் பள்ளிகள் திறந்து ஒரு வார காலத்திற்குள் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு விட்டது.அதனால் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு.மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.மேலும் தேர்வுகள்  நடத்தப்பட்டால் மாணவர்கள் அதிகம் கூட்டம் கூடுவர்  என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என  தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கிடையில் முதல்,இரண்டாம்  என ஆரம்பித்து தற்போது மூன்றாம் அலை வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.இச்சமயத்தில் அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.தினம் தோறும் பள்ளிகள் திறக்க படுவது குறித்து ஏதேனும் ஒரு புதிய திட்டம் பற்றி செய்தியாளர்களிடம் கூறி வருகிறார்.அந்த வகையில் நேற்று அவர் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளி திறக்கும் போது சுழற்சி முறையில் திறக்கப்படும் அதாவது முதல் நாள் 20 மாணவர்களும் அடுத்த நாள் 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் பள்ளிக்கு வருபவர்கள் எனக் கூறினார்.

மேலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் எந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசனை செய்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.இன்று பள்ளி திறப்பு பற்றிய புதிய அப்டேட் ஒன்றை அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.அந்த வகையில் தியாகராயநகரில் சென்னை நூலகம் சங்கத்தை சேர்ந்த நூல்கர்ளுக்கான விருது வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பள்ளிகள் திறப்பு பற்றி பேசினார்.அதில் அவர் கூறியது, மாவட்டங்கள் வாரியாக நூலகங்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது மற்றும் புதிய கட்டிடங்கள் தேவைப்படுகிறதா மற்றும்   அனைத்து மாவட்டங்களிலும் எந்த அளவிற்கு புத்தகங்கள் பாதுகாக்கப்படுகிறது  போன்றவற்றைக் ஏற்று கேட்டுள்ளோம் என்றார்.முதல்வர் தற்பொழுது அனைவருக்கும் மலர் கொத்துக்கள் கொடுப்பதற்கு  பதிலாக புத்தகங்களை பரிசாக கொடுங்கள் என்று கூறினார்.அவர் வழியே நூலகங்களுக்கு தேவைப்படும் அனைத்தையும் முழுமையாக கண்டறிந்து  செயல்படுத்த உள்ளோம் என்று கூறினார்.

நீங்களும் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.அவ்வாறு திறந்தால் 50 சதவீத மாணவர்கள் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார்.பள்ளிகளில் எவ்வகையில் வழிகாட்டு நெறி முறைகளை கடைப்பிடிப்பது போன்றவைகளை பற்றி இன்றளவும் கூட்டம் ஏதும் நடைபெறவில்லை.கடந்த ஆண்டு முதல் அலையின் இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது கடைப்பிடித்த நெறிமுறைகளைப் பற்றி கண்டறிந்து மற்றும் ஆலோசித்து விரைவில் அதற்கான தகவல்கள் வெளியாகும் என கூறினார்.

மேலும் கல்வித்துறை அமைச்சர் கூறியது நம் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தலையாய குறிக்கோளாக உள்ளது.ஆனால் இம்முறை பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.இருப்பினும் ஒருபக்கம் நீட் தேர்வுக்கான பயிற்சி நவம்பர் மாதத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது.மேலும் விஜய் உள்ளிட்ட தேர்வுகளுக்கும் ஜனவரி மாதத்திலிருந்து பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.