Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே ஒரு பொருள் போதும்! இறுகி இருக்கும் மலத்தைக் கூட அடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும்!

#image_title

இன்றைய காலங்களில் உணவு முறைகளை பிரச்சனை தான். அந்த காலத்தில் கம்பு களி சிறுதானிய வகைகளை சாப்பிட்டு வந்தோம். சாப்பிட்டதற்கு ஏற்றவாறு உடல் உழைப்பும் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் உட்கார்ந்த வண்ணமே வேலை கம்ப்யூட்டரில் வேலை. சாப்பிட்டது செரிமானம் அடைந்ததா என்றே தெரியாமல் மூன்று வேலையும் சாப்பிடுகிறோம். காலையில் மலம் கழிக்கும் பொழுது அது முழுவதுமாக வெளியே வந்ததா என்பது கூட தெரியாது.

 

அந்த காலங்களில் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற மாதத்திற்கு இரண்டு முறை பேதி மாத்திரை கொடுப்பார்கள். ஆனால் இன்று அந்த பழக்கவழக்கத்தையே மக்கள் மறந்து போய்விட்டன. இப்படி நாள்பட்ட மலம் உடலில் தங்கி இருக்கும் பொழுது தான் உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகின்றன. அதனால் மாதத்திற்கு இரு முறையாவது இந்த மாதிரி வயிற்றை சுத்தம் செய்யும் பொழுது உடலில் உள்ள பிரச்சனைகள் குறையும்.

 

இந்த ஒரு பொருளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்த குடித்தால் போதும் உங்களது முழு வயிறும் சுத்தமாகிவிடும்.

 

1. நிலாவரை

 

இந்த ஒரே ஒரு பொருள் தான் உங்களது முழு மலத்தையும் உடம்பிலிருந்து வெளியேற்ற போகிறது.

 

இது ஆன்லைன்களிலும் மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் ஐம்பது கிராம் 35 ரூபாய் தான்.

 

இந்த பொடியில் இருந்து 5 கிராம் மட்டும் எடுத்து ஒரு டம்ளரில் போட்டுக் கொள்ளுங்கள். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை ஒரு கிளாஸ் முழுவதும் ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் அடித்துக் கொள்ளுங்கள்.

 

சாப்பிட்ட பிறகு எப்பொழுது தூங்க செல்வீர்களோ அப்பொழுது இந்த நீரை குடித்துவிட்டு மேலும் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணி குடித்துக் கொள்ளுங்கள்.

 

8 மணி நேரத்திற்குள் இது வேலை செய்ய ஆரம்பித்து விடும். காலையிலேயே உங்களுக்கு அந்த உணர்வு ஏற்படும். வயிறு முழுவதுமாக கலக்கும் பொழுது எந்த உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு ஏற்படும். இப்பொழுது உங்களது முழு வயிறும் சுத்தமாகிவிடும்.

 

மாதத்திற்கு ஒரு முறை இதனை செய்து வரும் பொழுது உடம்பில் கழிவுகள் இல்லாமல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்.

 

Exit mobile version