Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே பொருள் போதும் 5 நிமிடத்தில் கருத்துப்போன கவரிங் நகைகளை புதிதுபோல் மாற்றலாம் 

பெண்களே உங்கள் கவரிங் நகைகள் கருத்து போய்விட்டதா?
கவலை வேண்டாம் ஐந்தே நிமிடத்தில் இது போன்று செய்து பாருங்கள்.அனைத்து கவரிங் நகைகளும் புதுசு போல பளபளக்கும்.

இது மிகவும் இயற்கை முறையாகும் இதனால் உங்கள் கவரிங் நகைகளுக்கு எந்தவிதமான சேதாரமும் வராது.வாங்க அந்த எளிய டிப்ஸை என்னன்னு தெரிஞ்சாகளாம்!

ஒரே ஒரு எலுமிச்சை பழம் போதும் உங்கள் கவரிங் நகைகளை புதுசு போல மின்னச் செய்ய.

ஒரு அகலமான பாத்திரத்தில் பெரிய அளவு எலுமிச்சை பழம் ஒன்றை பிழிந்து கொள்ளுங்கள்.

இந்த எலுமிச்சை பழ சாற்றில் இரண்டு சொம்பு தண்ணீர் ஊற்றுங்கள்.

இதனுள் நீங்க புதுசு போல ஆக்க நினைக்கும் கவரிங் நகைகளை போடுங்கள்.பின்னர் இதனை அடுப்பில் வைத்து 3 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் கொதித்து வரும் பொழுது மேலே கசடு மிதந்து வரும்.பின்னர் அடுப்பை நிறுத்திவிட்டு,உங்கள் கவரிங் நகைகளை எடுத்துப் பாருங்கள் நீங்களே அசந்து போயிடுவீங்க அவ்வளவு பளபளப்பாக இருக்கும்.

நீங்கள் கொதிக்கவைத்த கவரிங் நகைகளில் எலுமிச்சை சாறு ஒட்டியிருக்கும்.இதனை நீக்குவதற்கு சோப்பு அல்லது ஷாம்பினால் லேசாக கழுவுங்கள்.

அவ்வளவுதாங்க,மிகவும் ஈஸியான முறையில் உங்கள் கவரிங் நகைகள் அனைத்தும் மினுமினுக்க செய்துவிடலாம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.நீங்களே இந்த டிப்ஸை அனைவருக்கும் சொல்லுவீங்க.

Exit mobile version