ஒரு லட்சம் ரேசன் அட்டைகள் அச்சடிக்காமல் நிறுத்தி வைப்பு!! குமுறும் விண்ணப்பதாரர்கள்.. செவி சாய்க்குமா தமிழக அரசு..!!

0
107
#image_title

ஒரு லட்சம் ரேசன் அட்டைகள் அச்சடிக்காமல் நிறுத்தி வைப்பு!! குமுறும் விண்ணப்பதாரர்கள்.. செவி சாய்க்குமா தமிழக அரசு..!!

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மலிவு விலை பொருட்களால் கோடி கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் பயன்பெற ரேசன் அட்டை அவசியமான ஒன்றாகும். இந்த ரேசன் கார்டு பெற அரசுக்கு விண்ணப்பம் செய்த ஒருவருக்கு அடுத்த 15 நாட்களிலில் தபால் மூலம் அவை வழங்கப்படுவது நடைமுறையாக இருக்கும் நிலையில் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் ஆகியும் விண்ணப்பம் செய்த 1 லட்சம் பேருக்கு ரேசன் கார்டு வழங்கப்படவில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

இதற்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டதிற்கான பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பலதரப்பட்ட மக்களின் அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி செயல்படுத்தப்பட்ட ஒன்றாகும். இந்த திட்டதிற்கான வேலை தொடங்கப்படும் முன்பாகவே புது ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்த நபர்களின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. காரணம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்திற்கு அடிப்படை ரேசன் கார்டு தான். புதிதாக ரேசன் கார்டு வழங்கப்பட்டால் எங்கே அவர்களுக்கும் ரூ.1,000 தார நேரிடுமோ என்று சுமார் 1 லட்சம் விண்ணப்பங்களை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

8 மாதங்களுக்கு முன் விண்ணப்பம் செய்த நபர்களுக்கு இன்று வரை ரேசன் கார்டு கிடைக்க பெறாததால் அவர்களால் ரேசன் பொருட்கள் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. அதேபோல் ரேசன் கார்டில் பெயர் நீங்கம், பெயர் சேர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கும் அவை கிடைக்காததால் ரேசன் கார்டு வைத்து விண்ணப்பம் செய்ய கூடிய திட்டங்களுக்கும், பிற தேவைக்கும் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு அரசு இதுவரை செவி சாய்த்ததாக தெரியவில்லை. இதனால் தங்களின் உள் நோக்கத்திற்காக ஆளும் திமுக அரசு செய்து வரும் இந்த செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரேசன் கார்டு பெற விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைவில் ரேசன் கார்டு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு இருக்கிறது.