திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்!!

0
81

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்…

 

திருப்பதி மலைப்பகுதியின் வனப்பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை கூண்டுக்குள் பிடிப்பட்டதாக வனத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

திருமலை திருப்பதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைப்பாதையில் குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இதையடுத்து திருமலை திருப்பதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளது.

 

மேலும் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டது. அதன்படி சிறுமியை கடித்து கொன்ற  சிறுத்தை வைக்கப்பட்ட கூண்டுக்குள் சிக்கி பிடிபட்டது. இதையடுத்து மேலும் ஒரு சிறுத்தை கூண்டுக்குள் பிடிபட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

 

நேற்று(ஆகஸ்ட்16) இரவு இந்த சிறுத்தை கூண்டுக்கள் சிக்கியதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து வனத்துறையிர் “சிறுத்தை பிடிபட்ட நேரம் இரவு நேரம் என்பதால் அங்கு செல்லவில்லை. ஒரு சிறுத்தை கூண்டுக்குள் சிக்கிக் கொண்டால் அதன் ஜோடி சிறுத்தை அதே பகுதியில் மிக ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கும். அந்த நேரத்தில் யாராவது அங்கு சென்றால் கொடூரமான தாக்குதலை நடத்தும்” என்று கூறினர்.

 

சிறுத்தைக்காக வைக்கப்பட்ட கூண்டில் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஒரு சிறுத்தை பிடிபட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 14ம் தேதி கூண்டுக்குள் இரண்டாவதாக ஒரு பெண் சிறுத்தை பிடிபட்டது.  தற்பொழுது நேற்று(ஆகஸ்ட்16) இரவு மூன்றாவதாக ஒரு சிறுத்தை கூண்டுக்குள் பிடிபட்டுள்ளது.