இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை! இவர்களுக்கு தான் அதிகம் பதிப்பு!

0
160
One more monkey measles in India! This is the version for them!

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை! இவர்களுக்கு தான் அதிகம் பதிப்பு!

கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் குறைந்துள்ளது.அதனையடுத்து குரங்கு அம்மை என்ற நோய் பரவி வருகிறது.முதன் முதலில் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டனர். நாளடைவில் அனைத்து நாடுகளிலும் இத்தொற்று பரவியது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இந்தியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை தவிர்த்து இதர நாடுகளில் குரங்கு அம்மை ருத்ரதாண்டவம் எடுத்து ஆடுகிறது. இத்தொற்றானது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியது.

பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் மனிதர்கள் பழகுவதால் அதிலிருந்து இந்த தொற்று உருவாகிறது. இரும்பல், காய்ச்சல் ,தும்பல் போன்றவைகளால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பரவுகிறது. இது சின்னமையின் வழிவகை என்றும் கூறுகின்றனர். இதுவரை இந்தியாவில் நான்கு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் மூன்று பேருக்கு உறுதியான நிலையில் நேற்று டெல்லியில் ஒருவருக்கு உறுதியாகியுள்ளது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் டெல்லியில் தொற்று உறுதியானவர் எந்த வெளிநாட்டிற்கும் செல்லாதவர்.

அவ்வாறு இருந்த போதே இவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இன்று குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த 40 வயதுமிக்க ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.நாளடைவில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லண்டன் உலக சுகாதார அமைப்பானது குரங்கு அம்மை பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் இந்த குரங்கு அம்மை குறித்து ஆய்வுகள், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறை உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கொரோனா தொற்றை போல வளர விடாமல் ஆரம்ப கட்டத்திலேயே இதற்கான முடிவை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.