Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே தேசம்.. ஒரே மாணவர் ஐடி!! புதிய கல்விக் கொள்கை!!

One Nation.. One Student ID!! New Education Policy!!

One Nation.. One Student ID!! New Education Policy!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும் பயிலக்கூடிய மாணவர்களுக்கு APAAR ஐடியை முக்கிய அடையாள ஐடியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

மத்திய கல்வி அமைச்சகம் இந்த APAAR ஐடி முறையை புதிய கல்வி கொள்கை அம்சங்களின் அடிப்படையில் பிரதான் மந்திரி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கல்விக் கொள்கை அம்சத்தின் அடிப்படை நோக்கமானது ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி என்பதை முன்மொழிவதாகும். இந்த ஐடியின் மூலம் ஒரு மாணவனின் கற்றல் பயணம் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. APAAR ஐடியில் 12 இலக்க எண்கள் இருக்கும் என்றும் இந்த ஐடியின் மூலம் மாணவர்களின் உடைய மதிப்பெண் அட்டை மதிப்பெண் சான்றிதழ்கள் பட்டம் மற்றும் பட்டய சான்றுதல்கள் போன்றவை டிஜிட்டல் முறைகள் சேமித்து வைக்கப்படும் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது போன்ற தரவுகளை சேமித்து வைப்பதற்கு ஏ பி ஐ என்ற ஐடி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட APAAR ஐடி தரவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மாணவர்களுடைய சன் முக்கிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் இதனை AIM என்ற பிளாட்பார்ம் மூலம் பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐடி குறித்த மேலும் தகவல்களை பெறுவதற்கு 1800 8893511 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version