Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த கிழங்கு ஒன்று போதும்!! சாகும் வரை BP மற்றும் HEART ATTACK பாதிப்பே அண்டாது!!

நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்து தான் நம் உடல் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.முன்பெல்லாம் உணவு தான் மருந்து என்று சொல்லப்பட்டது.ஆனால் தற்பொழுது பின்பற்றும் உணவுப் பழக்கங்களால் கேன்சர்,ஹார்ட் அட்டாக்,உயர் இரத்த அழுத்தம்,இரத்த கொதிப்பு,சிறுநீரக கல்,சுவாசப் பாதிப்பு,கல்லீரல் நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதுபோன்ற நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை மீட்க மீண்டும் ஆரோக்கிய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையை நாம் பின்பற்ற வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் தான் நோயின்றி நாம் வாழ முடியும்.அந்தவகையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சேப்பங்கிழங்கு மற்றும் அதன் இலையை தொடர்ந்து உணவாக உட்கொள்ளலாம்.

சேப்பங்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

*நார்ச்சத்து
*வைட்டமின் ஏ,சி,பி மற்றும் ஈ
*கார்போஹைட்ரேட்
*கால்சியம்
*பாஸ்பரஸ்

தேவையான பொருட்கள்:-

1)சேப்பங்கிழங்கு – ஒன்று
2)சேப்பங்கிழங்கு இலை – ஒன்று
3)பாசிப்பருப்பு – 100 கிராம்
4)மிளகு – கால் தேக்கரண்டி
5)சீரகம் – அரை தேக்கரண்டி
6)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
7)பூண்டு பல் – நான்கு
8)தக்காளி – ஒன்று
9)உப்பு – தேவையான அளவு
10)வர மிளகாய் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் சேப்பங்கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு இலையை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு சேப்பங்கிழங்கு தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.அதேபோல் சேப்பங்கிழங்கு இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு 100 கிராம் அளவிற்கு பாசி பருப்பை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்.

3.பிறகு நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கு மற்றும் இலையை அதில் போடவும்.அடுத்து கருப்பு மிளகு,சீரகம்,வர மிளகாய்,மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

4.பிறகு நான்கு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டுக் கொள்ளவும்.அடுத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

5.பிறகு ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி குக்கரில் போடவும்.இறுதியாக இரண்டு வர மிளகாய்,சிறிது எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு முதல் மூன்று விசில் விட்டு பருப்பு கூட்டு போல் செய்து சாப்பிடலாம்.

6.அதேபோல் சேப்பங்கிழங்கில் சூப் தயாரித்து பருகி வந்தாலும் இதய ஆரோக்கியம் மேம்படும்.உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் முற்றிலும் குணமடையும்.

Exit mobile version