விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் முத்துராஜ். அவர் அந்த பகுதி மற்றும் அதன் சுட்டறு வட்டார பகுதிகளில் பந்தல் அமைப்பது மற்றும் பேனர் கட்டுவது என தொழில் செய்தது வருகிறார். மேலும் அவருடன் முருகன் என்பர் பயற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று சேத்தூர் பகுதியை சேர்ந்த கருத்தன் பாண்டியன், மாரி பிரபா என்கிற ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் இருந்தது. அதற்காக முதலில் பந்தல் அமைத்து கொடுத்தார்.
அதன் பின்னர் பேனர் அமைப்பதற்காக சேத்தூர் ஐந்து கடை பஜார் பகுதயுள்ள ட்ரான்ஸ்பாம் அருகே திருமணத்திற்கான இரும்பு சட்டங்களால் ஆன பேனர் பலகையினை கட்டும் போது, எதிர்பாராத விதமாக டிரான்ஸ் பாரத்தில் உள்ள மின்சார இணைப்பில் பட்டுள்ளது. மின்சார இணைப்பில் பட்ட அடுத்த நிமிடம் மின்சாரம் தாக்கி முத்துராஜ் மற்றும் முருகன் ஆகிய இருவரும் தூக்கி வீசப் பட்ட நிலையில், இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் பணியாளர் முருகன் உடலில் அதிக அளவு மின்சாரம் பயந்ததால் மருத்துவமை கொண்டு செல்லும் வழியில் துடிதுடித்து இருந்தார். மேலும் பந்தல் உரிமையாளர் முத்துராஜ் விருதுநகர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவர சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். மேலும் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்திஉள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தது விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இது போன்ற பேனர் விபத்துகள் அதிகபடியாக நடந்து வருகிறது. அதனை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கருத்தா உள்ளது.