Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாலையில் துடிக்க துடிக்க  ஒருவர் பலி ! சேலத்தில் பரபரப்பு!

One person is killed in the road! Excitement in Salem!

One person is killed in the road! Excitement in Salem!

சாலையில் துடிக்க துடிக்க  ஒருவர் பலி ! சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அக்கி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(48).இவர் நரசிங்கபுரத்தில் ஒளி மற்றும் ஒலி அமைப்பு மற்றும் விழாக்களுக்கு மேடை ,பந்தல் போன்றவை அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அலங்காரம் செய்யும் பணியையும் செய்து வந்தார். அப்போது அதே பகுதியில் கொத்தம்பாடி பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பெங்களூரில் இருந்து ஆத்தூர் அருகே உள்ள சின்னபுனல்வாசல் கிராமத்திற்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக ராஜா மீது மோதியது.அப்போது ராஜா தூக்கி வீசப்பட்டார்.அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கார் ஓட்டி வந்த சசிகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version