Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு தக்காளி போதும் 5 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்! 

ஒரு தக்காளி போதும் 5 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்!

பலரும் தாங்கள் உடல் பருமனாக உள்ளோம் இன்று வருத்தம் அடைவர். அதற்காக பல வழிமுறைகளை பின்பற்றுவர். ஒரு சிலர் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடல் எடை குறைக்க முயல்வர். பல முயற்சிகள் செய்தும் எதுவும் அவர்களுக்கு பயனளிக்காது.

அவ்வாறு இருப்பவர்கள் தக்காளியை இப்படி பயன்படுத்தினால் போதும். ஒரே மாதத்தில் 5 கிலோ வரை எடையை குறைக்கலாம். தக்காளி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க பயன்படுகிறது. இது சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தக்காளி ஒரு நல்ல தீர்வு.

மேலும் தக்காளியில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் நமது எலும்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும். இரண்டு தக்காளி எடுத்து நன்றாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதனுடன் இரண்டு கேரட்டை எடுத்தும் அதேபோல நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட் ஆனது செரிமான கோளாறு பிரச்சனையை சரி செய்யக்கூடியது.

நமது கல்லீரலில் உள்ள பிரச்சனைகளுக்கு அருமருந்து கேரட் தான். மேலும் கேரட்டை விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பின்பு ஒரு துண்டு இஞ்சி தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இஞ்சி ஆனது தசை வலி தசை பிடிப்பிற்கு நன்றாக உதவும். ஒற்றைத் தலைவலிக்கும் இஞ்சி நல்ல ஒரு தீர்வு. இதை மூன்றையும் மிக்ஸி ஜாரில் ஜூஸாக நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் பெரும் வயிற்றில் இந்த பானத்தை குடித்து வர உடல் எடை அப்படியே குறையும்.

Exit mobile version