ஒரு டம்ளர் போதும்!! தொப்பை மெழுகு போல் உருகி கரைந்து விடும்!!
நம்மில் சில பேர் வயிற்றில் இருக்கக்கூடிய தொப்பையால் தினமும் சிரமப்படுகின்றனர். நடக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே வயிற்றில் இருக்கக்கூடிய தொப்பையை குறைப்பதற்கான ஒரு சிறந்த தீர்வை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை
இஞ்சி
மிளகு
பட்டை
செய்முறை:
எலுமிச்சையை பிழிந்து அதன் சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது இதன் தோலை சிறிது சிறிதாக நறுக்கி ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு அரை இன்ச் அளவு இஞ்சியை தோலை நீக்கி சுத்தம் செய்துவிட்டு நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக கால் தேக்கரண்டி அளவு கருப்பு மிளகை எடுத்துக் கொள்ளவும். அடுத்து இதனுடன் பட்டையை எடுத்துக் கொள்ளவும். இப்போது நறுக்கி வைத்திருக்கக்கூடிய எலுமிச்சை தோலுடன், துருவி வைத்த இஞ்சி, மிளகு மற்றும் இரண்டு பட்டையை சேர்த்து அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் நான்கிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு இந்த வானத்தை பத்து நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்க வேண்டும். இப்போது இந்த பானத்தை வடிகட்டி விட்டு அதனுடன் நாம் பிழிந்து வைத்திருக்கக்கூடிய எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளவும். மேலும் இந்த வானத்துடன் சுவைக்காக சிறிதளவு தேனை கலந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேனை தவிர்க்க வேண்டும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது நமக்கு பசி ஏற்படுவதை குறைக்கிறது. எனவே நம் உடல் எடையும் வேகமாக குறையும்.
வேகமாக எடை குறைய வேண்டும் வயிற்றில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் இதை தவறாமல் குடிக்க வேண்டும். வயிற்றில் இருக்கக்கூடிய தொப்பை குறைந்த பிறகு இந்த பானத்தை நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம்.
பொருட்களின் பயன்கள்:
இந்த பானமானது நம்முடைய உடல் எடை எடையை குறைக்க மட்டும் பயன்படாமல் மொத்த உடலையும் இது சுத்தம் செய்கிறது. இந்த பானத்தை நாம் குடிக்கும் போது தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். டயட்டில் இருப்பவர்கள் பழங்களையும் காய்கறிகளையும் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது சேர்த்து இருக்கக்கூடிய எலுமிச்சையின் தோல் மற்றும் சாறுகளில் வைட்டமின் சி சக்தி அதிகமாக உள்ளதால் நம் பசியை இது குறைகிறது. இந்த வானத்தில் சேர்க்கப்பட்டிருக்க கூடிய நிலவானது நம் உடம்பில் சூட்டை அதிகப்படுத்துகிறது. எனவே உடம்பில் இருக்கக்கூடிய கொழுப்புகள் வேகமாக கரைகிறது. இந்த மிளகா ஆனது நம் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி நமக்கு கேஸ் அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
மேலும் இதில் சேர்த்து இருக்கக்கூடிய பட்டையானது நம் உடம்பில் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. மேலும் இது நம்முடைய கேஸ்ட்ரிக் பிரச்சனையை சரி செய்யவும் உதவி செய்கிறது. குறிப்பாக நம் உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் தருவதை இது பார்த்துக் கொள்கிறது. இதனால் நம்முடைய இதயம் கிட்னி நுரையீரல் என அனைத்துமே துரிதமாக வேலை செய்கிறது.