ஒரு வழியாக நோய் தொற்று முடிவுக்கு வந்தது! மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை!

0
152

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் இந்தியாவில் நூல் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது இதன் காரணமாக, இந்தியா முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அதோடு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல கட்டமாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு நாட்டில் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த தீவிர நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நாட்டில் மெல்ல, மெல்ல நோய் தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் குறைந்து வருவதால் நோய் தொற்று பரவல் முடிவுக்கு வந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் நோய் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 27 நாட்களாக நாளொன்றுக்கு 30,000 குறைவாகவே பதிவாகி வருகிறது. உயிரிழப்புகளும் 10க்கும் குறைவாகவே இருக்கிறது.

நோய் தொற்று பரவலின் தற்போதைய நிலை தொடர்பாக புது டெல்லி மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாவது வழக்கமான ப்ளூ காய்ச்சலின் அறிகுறியும் நோய்தொற்று அறிகுறியை போல தான் இருக்கிறது ப்ளூ காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை விட நோய் தொற்று எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவருக்கு மிக லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன.

முன்னர் இருந்ததைப் போல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு இளமை மோசமானதாக இருக்கவில்லை அதேசமயம் முதியோர் மற்றும் 2க்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

நோய் தொற்றின் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபட துவங்கி விட்டோம். நோய் தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் வைரஸ் உருமாற்றமடைவது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே பயப்பட தேவையில்லை. அதன் தீவிர தன்னை குறித்த ஆராய்ச்சிகள் மட்டும் தொடர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.