திருவாரூரில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் நிருபருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.
கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருந்து வருகிறது வெங்காய விலை உயர்வு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ள அவர் கொடுத்த அறிக்கையை ஒரு மாயை என குறிப்பிட்ட அவர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே வெங்காய விலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது படிப்படியாக வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.
2010ம் ஆண்டு வெங்காயத்தின் விலை ரூ 160 வரை விற்கிறது அப்போது திமுக ஆட்சியில் இருந்தது அப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினால் அப்போது ஐந்து கடைகள் மட்டுமே குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்தார்கள் ஆனால் தமிழக அரசு பசுமைப் பண்ணை கடைகள் 40க்கு தற்போது வரை விற்பனை தொடர்ந்து வெங்காயத்தை விற்று வருகிறோம் எகிப்து நாட்டிலிருந்து வந்த வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்கிறது.
இதில் தமிழகத்திற்கு 1000 டன் வெங்காயம் கேட்கப்பட்டுள்ளது முதற்கட்டமாக இன்னும் இரண்டு நாட்களில் 500 டன் வெங்காயம் தமிழகத்துக்கு வந்துவிடும் அதை மானிய விலையில் கொடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது மேலும் தமிழகத்தில் 6000 ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.