வெங்காய சமோசா.. ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்!!

0
88
Onion Samosa.. An easy and delicious evening snack!!

வெங்காய சமோசா.. ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்!!

நம்மில் பலருக்கு சமோசா என்றால் மிகவும் பிடித்த உணவுப் பண்டமாக இருக்கிறது.இதன் வாசனை மற்றும் ருசி ஆளையே சுண்டி இழுத்து விடும்.இந்த சமோசாவில் வெஜ் சமோசா,உருளைக் கிழங்கு சமோசா,வெங்காய சமோசா என்று பல வகைகள் இருக்கிறது.மைதா மாவு கொண்டு தயாரிக்கப்படும் இந்த சமோசாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்கிறார்கள்.

தேவையான பொருட்கள்:-

*மைதா – 3 கப்

*நெய் – 2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*பெரிய வெங்காயம் – 1/2 கிலோ

*பச்சை மிளகாய் – 2

*மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – 1/2 கப்

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 3 கப் மைதா,தேவையான அளவு உப்பு,2 தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து விடவும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவை ஒரு ஈரத் துணி கொண்டு 30 நிமிடம் ஊற விடவும்.

பின்னர் 1/2 கிலோ பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி சீரகம்,நறுக்கி வைத்துள்ள 1/2 கிலோ வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கி வந்த பின்னர் 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்,1/4 தேக்கரண்டி கரம் மசாலா,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின்னர் ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.அடுத்து பூரி போன்று வட்டமாக தேய்த்து அதை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை வைத்து சமோசா வடிவில் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.இதே போன்று அனைத்து மாவு உருண்டைகளையும் சமோசா வடிவில் செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சமோசா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடற்றியதும் மிதமான தீயில் வைத்து தயார் செய்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.