Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது புதுசா இருக்கே..!! உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் நீக்க இந்த வெங்காய தோல் டீ ட்ரை பண்ணுங்க..!!

Onion Skin Tea in Tamil

Onion Skin Tea in Tamil: வெங்காயத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று அதனை உரிக்க உரிக்க ஒன்றும் இல்லை என்று தான் கூறுவார்கள். வெங்காயம் சமையலில் ஒரு முக்கியமான பொருள். அது இல்லாமல் பெரும்பாலான சமையல்கள் முழுமையடைவதில்லை. வெங்காயம் பயன்படுத்தி சமைத்தால் தான் உணவு டேஸ்ட்டாக இருக்கும் என்று நாம் அதனை சுவைக்காக பயன்படுத்தி வருகிறோம்.

இந்த வெங்காயத்திலும் வகைகள் உள்ளன. பொதுவாக வெங்காயத்தை உறிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வரும், பச்சையாக சாப்பிட்டால் சிறிது உரைப்பது போல இருக்கும். வெங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால் அது பலருக்கும் தெரியாது. அந்த வகையில் நாம் வெங்காயத்தை பயன்படுத்தும் போது வெங்காய தோலை உரித்து அதனை கீழே போட்டுவிட்டு தான் வெங்காயத்தை பயன்படுத்துவோம். ஆனால் அந்த வெங்காய தோலில் அவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளது அதனை பற்றி இந்த பதிவில் (onion peel benefits In tamil) காண்போம்.

வெங்காய தோல் பயன்கள்

தோல் அழற்சி உள்ளவர்கள் வெங்காய தோலை நீரில் கொதிக்க வைத்து பருகி வர உடனடியாக சரியாகிவிடும். வெங்கயாத் தோலில் Quercetin உள்ளது. இது தோலில் அழற்சி ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராக ஃபிளாவனாய்டகளை கொண்டது. எனவே தோலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராக போராடுகிறது.

வெங்காயத் தோலில் உள்ள Quercetin இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடலின் கொழுப்பை குறைப்பதால் இதயத்திற்கு நன்மை பயக்குகிறது.

மேலும் வெங்காயதோலில் வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளதால் இதனை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமம் பாதுக்காகப்படுகிறது.

வெங்காய தோலில் வைட்டமன் ஏ உள்ளதால் இது கண்பார்வையை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் இந்த வெங்காய தோலில் தயாரிக்கப்படும் டீயில் குறைந்த கலோரிகள் உள்ளன. எனவே வெங்காய தோலில் தயாரிக்கப்படும் டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து உடல் எடை குறையும்.

இந்த வெங்காய தோலை சிறிதளவு எடுத்து அதனை நீரல் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இப்போது வெங்காய தோலின் நிறம் அதில் இறங்கி டீ இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும் இது வெதுவெதுப்பான நிலையில் தேன் கலந்து சாப்பிட்டலாம்.

மேலும் இந்த வெங்காய தோலை சிறிதளவு எடுத்து அதனுடன் வினிகர் கலந்து ஒரு கண்ணாடி ஜாடியில் 10 நாட்கள் அடைத்து பிறகு அதனை ரொட்டி போன்ற உணவு பொருட்கள் தயாரிக்கும் போது பயன்படுத்தி கொள்ளலாம்.

தினமும் குடிக்கும் டீ, காபிக்கு பதிலாக இந்த வெங்காய தோலை 50 கிராம் எடுத்து அதனை 100 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து, இஞ்சி தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம். வெதுவெதுப்பாக இருக்கும் போது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாக குறையும்.

மேலும் படிக்க: இனி காலையில் இந்த blue tea குடியுங்கள்..!! உடல் எடை குறைய, முகம் பளபளக்க, சர்கரை நோய்.. அனைத்திற்கும் ஒரே தீர்வு

Exit mobile version