இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை !! உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு !!

0
136

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டு வருவதனால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர்.தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயத்தின் வரத்து நிறுத்தப்பட்டதால் இந்த விலை ஏற்றம் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வெங்காயத்தின் விலையை சீராக்க வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 45-க்கு வியாபாரம் செய்யப்பட்டது.

வெங்காய விலை உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில், வெங்காயத்தின் விலை உயர்வு தற்காலிகமான ஒன்று என்றும், வெங்காய அறுவடை பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவே வெங்காய விலை உயர்வு இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ரேஷன் கடைகளில் தற்பொழுது வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இனிமேல் வெங்காயம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தால் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவு எடுத்து வருவதாகவும் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த அறிவிப்பு , நடுத்தர மக்கள் மற்றும் ரேஷன் பொருட்களை நம்பி வாழும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.