தமிழகம்: வெங்காயம், பூண்டு விலை உயர்வு
தற்போது பூண்டு ஒரு கிலோ சராசரியாக அனைத்து இடங்களிலும் ரூ.400 அதிகமாக விற்பனை செய்யபடுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 2மாதம் முன்பு தக்காளி கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. அதனை அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது கிலோ ரூ.20 விற்பனை செய்யபடுகிறது. ஆனால் பூண்டு கொண்டுவர முடியவில்லை எனில் விளைச்சல் குறைவாக உள்ளது. மேலும் தற்போது வெங்காயம் விலை தொடர்ந்து அதிகமாகி கொண்டு வருகிறது. ஒரு கிலோ கிட்டத்தட்ட ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு விலை குறைப்பு நடவடிக்கை எடுத்தாலும் பல இடங்களில் வெங்காயம் விலை அதிகமாக விற்பனை செய்யபடுகிறது.
அதற்க்கு காரணம் தற்போது விவசாயம் செய்தது வரும் பல விவசாயிகள் தங்களது நிலங்களை விற்பனை செய்தது வருகின்றனர். விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் பயிர் அதிகமாக செய்யாமல் இருகின்றனர். அப்படியே விவசாயம் செய்தது விற்பனைக்கு கொண்டு சென்றால் தகுந்த விலை கிடைப்பத்தில்லை. அது மட்டும் இல்லாமல் கடந்த மாதம் ஐப்பசி அதிக திருமண விழ இருந்த நிலையில் காய்க்காறி விலை அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து இந்த மாதம் கார்த்திகை மதம் என்பதால் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பத்தர்கள் சைவம் உணவு மட்டும் எடுப்பதால் காய்கறி தேவை அதிகமாக உள்ளது.
இதனால் கொத்தவரை கிலோ 50 ரூபாய், முருங்கைக்காய் கிலோ 55 ரூபாய், கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய், பீன்ஸ் கிலோ 70 ரூபாய், இஞ்சி கிலோ 150 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 30 ரூபாய், முள்ளங்கி கிலோ 25 ரூபாய், பீர்க்கங்காய் கிலோ 45 ரூபாய், புடலங்காய் கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெங்காயம், பூண்டு, மட்டும் இல்லாமல் அனைத்து காய்கறிகளும் விலை அதிகமாக உள்ளது.