மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை?

0
223
online-classes-are-back-status-of-students-writing-public-exam

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி ,கல்லூரிகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் என அனைத்துமே ஆன்லைன் மூலமாக தான் நடைபெற்றது.

அதனையடுத்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.மாணவர்களும் நேரடி வகுப்பிற்கு சென்று நடப்பாண்டின் பொது தேர்வும் எழுதினார்கள்.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.அதனால் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகின்றது அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் விதமாக விடுமுறை அளித்துள்ளது.

மேலும் தற்போது தனியார் பள்ளிகளில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்த ஆன்லைன் வகுப்பிற்கு காரணம் பொது தேர்வு எழுதும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்பதால் தான் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முனதாகவே ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை இல்லை என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.