ஆன்லைன் மருந்து வினியோகம்… 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்…

0
92

 

ஆன்லைன் மருந்து வினியோகம்… 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்…

 

ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 90 சதவீதம் போதை மருந்துகள் தான் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு மருந்துகள் வணிகர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செல்வன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

 

தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலமாக இருந்த இடத்தில் அனைத்தும் கைக்கு கிடைக்கும் விதத்தில் உள்ளது. அந்த வகையில் ஆன்லைன் மூலமாக உணவு விற்பனை செய்வது, ஆன்லைன் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்வது, ஆன்லைன் மூலமாக பல ஆடைகள் விற்பனை செய்வது போல பல அத்தியாவசிய பொருள்களும் ஆன்லைன் மூலமாக நம் கைக்கு கிடைக்கும் வகையில் விற்பனை நடந்து வருகின்றது.

 

அந்த வகையில் தற்பொழுது மருந்துகளும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அவ்வாறு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படும் மருந்துகளில் அதிகபட்சம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வன் அவர்கள் “ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்து விற்பனையை கட்டுப்படுத்த எந்தவித சட்டங்களும் தற்பொழுது இல்லை. இதனால் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். ஆன்லைன் வழியாக நடக்கும் மருந்து விற்பனையில் தான் 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றது.

 

மத்திய அரசு தடை செய்த 14 மருந்துகள் ஆன்லைன் மூலமாக நடக்கும் மருந்துகள் விற்பனையில் தாராளமாக கிடைக்கின்றது. மேலும் பல தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

 

நேரடியாக மருந்துகள் வாங்கச் செல்லும் பொழுது மருத்துவர்களின் ஆலோசனையை கேட்க முடியும். ஆனால் ஆன்லைனில் மருந்துகள் வாங்கினால் அதை கொண்டு சென்று மருத்துவர்களின் ஆலோசனையை பெற முடியாது.

 

ஆன்லைன் மூலமாக வாங்கி உட்கொள்ளும் மருந்துகளால் உடல்நலம் பாதிக்கப்படும். மேலும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகின்றது.

 

ஆன்லைன் மருந்து விற்பனையானது வெறும் லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. ஆன்லைன் மூலமாக நடக்கும் மருந்து விற்பனையால் மாநிலத்தின் அரசு வருவாய் 80 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை பாதிக்கப்படுகின்றது.

 

ஆன்லைன் முலமாக நடக்கும் இந்த பாதுகாப்பற்ற மருந்து விற்பனையை தடைசெய்து நோயாளிகளின் உயிர்களை காக்க மத்திய அரசு புதிய நிரந்தர சட்டம் உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.