Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்லைன் சூதாட்ட பலி எண்ணிக்கை உயர்வு! கண்டுகொள்ளாத ஆளுநர் – பாமக அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட பலி எண்ணிக்கை உயர்வு! கண்டுகொள்ளாத ஆளுநர் – பாமக அன்புமணி ராமதாஸ்

சமீப காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பல உயிர்கள் பலியான நிலையில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை மசோதா அவசர சட்டத்தை இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அந்த தடை மசோதா அவசர சட்டமானது காலாவதியான நிலையில் தற்போது வரை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்து பாமக பலமுறை கண்டித்து உள்ளது. அந்த வகையில் தற்பொழுது தடை மசோதா சட்டம் இயற்றி காலாவதியான நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் நான்காவது தற்கொலை நடந்துள்ளது அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த உத்தண்டி வளவு கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்ற ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

https://twitter.com/draramadoss/status/1601795884064583680?t=QYDhkGK12nz0rfWIaNd3DA&s=19

ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு, சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 36-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய 12 நாட்களில் நிகழ்ந்த நான்காவது தற்கொலை இதுவாகும்

ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதற்கு அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகளே சாட்சி. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வுகளாக மாறுவதை தவிர்க்க முடியாது

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரத் தேவை. ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும் தற்கொலைகளை ஆளுனர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Exit mobile version