ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை? இளைஞர்களுக்கு டிஜிபி யின் அறிவுரை!!
ஆன்லைன் ரம்மி விளையாட்டை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் நூதன முறையில்
மோசடி செய்வதால் பணத்தை இழந்து தற்கொலை வரையில் செல்ல வழிவகை செய்கின்ற
என காவல் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆரணியில் காவல்நிலையத்தை ஆய்வு செய்தபோது பேட்டி அளித்தார்.
திருவண்ணாமலை ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் இன்றுடி.ஜி.பி சைலேந்திர பாபு வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக
வழக்கு சம்மந்தமாக கோப்புகளை ஆய்வு செய்த போது சிறந்த முறையில்
கையாண்டுள்ளதாக கூறி கண்ணமங்கலம் காவல்நிலைய எழுத்தர் காத்திக் என்ற
காவலருக்கு ரூ 5000ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கினார்.
பின்னர் காவல்நிலை வளாகத்தில் நிறுத்தி வைக்கபட்ட வழக்கு சம்மந்தமான
வாகனங்களை ஆய்வு செய்து உடனடியாக சம்மந்தபட்டவர்களிடம் ஓப்படைக்க
அறிவுறுத்தினார்.
இதனையடுத்து காவலர் குடியிருப்பில் உள்ள
தாய்மார்களிடம் காவலர் குடியிருப்பு குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி சைலேந்திரா பாபு : ஆன்லைன் ரம்மி
விளையாட்டை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் இதனை ஏற்கனவே கம்பியூட்டரில்
பதிவு செய்யபட்ட விளையாட்டு முதலில் ஆசைகாட்டி பின்னர் அனைத்து
பணத்தையும் நூதன முறையில் பறிக்கின்றனர்.
இதனால் இளைஞர் தற்கொலை சம்பவம்
நடந்தேறி வருகின்றன.
மேலும் தற்போது கஞ்சா போதையை ஓழிக்க அனைத்து பள்ளிகளிலும் காவலர்கள்
விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கஞ்சா போதையில் நடைபெறும் சம்பவங்களை
எடுத்துரைத்து இதனால் ஏற்படும் விளைவுகள் சமுதாயத்தில் எப்படி வளர
வேண்டும் என்று காவலர்கள் பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துரைத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.