Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு பார்சலில் வந்தது அதிர்ச்சி

ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு பார்சலில் வந்தது அதிர்ச்சி

இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் கரோல். இவர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் தளத்தில்  ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஐ-போன் 13 பிரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார். அந்தப் போனின் பார்சல்  இரண்டு வாரங்களாகியும் வராமல் இருந்துள்ளது. அதனால் அவர் பல முறை அந்த ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டு புகாரும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இறுதியாக இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் ஆர்டர் செய்த பொருள் கடந்த வாரம் அவர் வீட்டிற்கு வந்துள்ளது. இரண்டு வார காத்திருப்புக்கு பின்பு, தான் ஆர்டர் செய்த  ஐ-போனை பார்க்க ஆவலாக இருந்த அந்த நபர் அதே ஆவலோடு அந்த பார்சலை திறந்து பார்க்க, பார்சலில் காத்திருந்ததோ பேரதிர்ச்சி. அதாவது அந்த பார்சலில் ஐபோன் 13 பிரோ மேக்ஸிற்கு பதிலாக இரண்டு டெய்ரி மில்க் ஓரியோ சாக்லேட் (dairy milk oreo) இருந்துள்ளது. அதை பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதன்பின்னர் மீண்டும் டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய புகாரை அளித்துள்ளார். அவர்கள் அதன் பின்பு இந்த பொருளை விற்ற நிறுவனத்திடமும் முறையிட்டுள்ளனர். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்த பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த நபர் பகிரந்துள்ளார்.

Exit mobile version