தமிழகத்திலே சமீபகாலமாக நோய்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, பல அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் அதனை பொதுமக்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை.முககவசம் அணிய வேண்டும், தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது, அதிக நபர்கள் ஒரு இடத்தில் கூட கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை அரசு விதித்தாலும் அதனை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
ஆகவே சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு நேற்றையதினம் பிறப்பிக்கப்பட்டது. கோயில்கள், மசூதிகள் மற்றும் கூட்டங்கள் காய்கறி சந்தை என்று எல்லாவற்றிற்கும் சில பல கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் 15 ஆயிரத்து 659 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 4 ஆயிரத்து 706 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. 82 பேர் இதுவரையில் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதேபோல 11 ஆயிரத்து 65 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நோய் தொற்று அதிவேகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று ஞாயிறு ஊரடங்கு காரணமாக, மாநிலம் முழுவதுமே முழு ஊரடங்கு அமலில் இருந்தது ஆனாலும் மருத்துவ தேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் நேற்று எல்லா தடுப்பூசி மையங்களும் திறந்து வைக்கப்பட்டு இருந்தன.
அதன்படி நேற்று 3198 நோய்தொற்று மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக பல தடுப்பூசி மையங்களில் வழக்கத்தைவிட தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. வழக்கமாக தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் 10 ஆயிரத்து 553 பேர் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டு கொண்டார்களாம்.
இந்த நோய் இருக்கின்ற 45 வயதிற்கு மேற்பட்ட 1478 நபர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட 3797 நபர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 425 பேருக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு 852 நபர்களுக்கும், நேற்றைய தினம் இந்த தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 52 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 45 லட்சம் நபர்களுக்கு முதல் டோஸும் 7 லட்சம் பேருக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டிருக்கிறது மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரையில் 69. 85 லட்சம் தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
நம்முடைய நாட்டில் இதுவரையில் 14 கோடிக்கும் மேலான ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் நேற்று முன்தினம் மட்டும் நாடு முழுவதும் 25 லட்சத்து 36 ஆயிரத்து 612 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று மத்திய சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.