தமிழக அரசிடம் ரூ.50,000 பெற 2 வாரங்கள் தான் டைம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
181
Only 2 weeks time to get Rs.50,000 from Tamilnadu government!! Don't miss this opportunity!!

தமிழக அரசிடம் ரூ.50,000 பெற 2 வாரங்கள் தான் டைம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கென்று பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000,12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்குதல் போன்ற நல்ல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பெண் குழந்தைகள் போல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி தொடரும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொன்டு வருகிறது.

இதை தவிர்த்து முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் விதமான 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான உதவித்தொகை 50,000 ரூபாய் 24 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி 2010-11 ஆம் கல்வியாண்டு முதல் தற்பொழுது வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப்படிப்புப் பயிலும் அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 வழங்கும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.25,000 அவரது 18 வயதிற்கு பின்னர் வட்டியுடன் முதிர்வு தொகை வழங்கப்பட்டு வருகிறது.பெண் குழந்தைகளின் உயர்கல்வி கனவை நனவாக்கும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்பொழுது இந்த திட்டத்திற்கான ஆவணங்கள் சரி பார்ப்பு பணிகள் நடந்து வருகிறது.இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த 2 வாரங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.