Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரவு நேர ஊரடங்கு! ஆம்னி பேருந்துகளில் குறைந்த பயணிகள்!

தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவலின் அதிகரிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருக்கிறது..இதனைத் தொடர்ந்து பெரும்பாலும் இரவு நேரங்களில் அரசு போக்குவரத்து சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் நெடு தூரம் பயணிக்கும் ஆம்னி பேருந்துகள் பெரும்பாலும் தற்சமயம் பகல் நேரங்களில் தங்களுடைய போக்குவரத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.முன்பதிவு செய்த பயணிகளுக்காகவே இந்த சேவை அதிகம் பயன்படுத்தபடுவதாக சொல்கிறார்கள்.

ஆம்னி பேருந்துக்ந்ளும் அரசு பேருந்துகள் போல திட்டமிட்டு நேர இடைவெளியில் இயக்கப்படுவதாக சொல்கிறார்கள்.அதேபோல மதியத்திற்கு மேல் பேருந்து இயக்கம்.மெல்ல மெல்ல குறைத்துக்கொள்ளப்படுகிறதாம்.இந்த சூழ்நிலையில், ஆம்னி பேருந்துகள் குறித்து இருவேறு சங்கங்கள் அறிவித்த மாறுபட்ட அறிவிப்பு காரணமாக, மக்கள் எல்லோரும் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தார்கள். அதாவது ஒரு சங்கம் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்றும் இன்னொரு சங்கம் இயங்கும் என்றும் அறிவித்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும்? என்பதில் மக்களிடையே குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகாலை 4.30 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. என தெரிவிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 700 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்சமயம் அது 90 பேருந்துகள் ஆக மாற்றப்பட்டு இருக்கிறது. திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற ஊர்களுக்கு காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் குறைந்த அளவிலான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version