Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tasmac) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசுக்கு வருவாய் வரும் முக்கியமான காரணிகளில் டாஸ்மாக் கடைகளும் ஒன்று. அதேபோல், இந்த மதுபான கடைகளின் வாயிலாக, விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அரசுக்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும்.

தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளோடு சேர்த்து பார்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பார்களில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில், வெளியில் ரூ.10க்கு விற்கப்படும் வாட்டர் பாட்டில்கள் டாஸ்மாக் பார்களில் ரூ.50க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பார்களை டெண்டர் எடுக்கும் போது பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும், முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்றே வருவதாக கூறிய பார் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி; பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதத்திற்குள் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version