Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே? சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்!

Only for these three areas? A special vehicle for visiting the tourist area!

Only for these three areas? A special vehicle for visiting the tourist area!

இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே! சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் உள்ளிட்ட மூன்று சுற்றுலா பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் எப்பொழுதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். மேலும் அந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதலால் அங்கு  திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தவிர்க்க, போலீசார் ரோந்து செல்வது மிகவும்  அவசியம்.

மேலும் அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது போலீசாரத்துக்கு ஏற்படும் சிரமங்கள் கருதி ரோந்து பணியை ஈடுபடும் போளிசர்களுக்கு  சிவப்பு நிற தனி வாகனம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாமல்லபுரம் பகுதிகளில் ரோந்து பணிந்து ஈடுபடும் போலீசாருக்கு  தனி  வாகனம் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கு இடமான யாரேனும் சுற்றி திரிந்தால் அவர்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசார்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version