Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹிந்துக்களுக்கு தான் அனுமதி.. உத்தரவிட்ட நீதிபதி..

Only Hindus are allowed.. Judge ordered..

Only Hindus are allowed.. Judge ordered..

கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை கொளத்தூரில் உள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, “அறநிலையத்துறை இணை ஆணையர்” அறிவிப்பு வெளியிட்டிருந்தார். பணியிடங்களுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து “சுஹாயில்” என்பவர் “உயர் நீதிமன்றத்தில் மனு” தாக்கல் செய்தார். அதில் அவர் நான் “முஸ்லிம் சமூகத்தை” சேர்ந்தவன், இதனால் “அறநிலைய துறை” அறிவித்துள்ள நிபந்தனைக்கு நான் தகுதி இல்லை என்று “நேர்முக தேர்வில்” என்னை நிராகரித்து விட்டனர். எனவே இந்த அறநிலையத்துறையின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

சுஹாயிலுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் ” ஹிந்துக்கள் மட்டுமே” விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்வது “அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது”, கல்லூரி என்பது மத நிறுவனம் அல்ல, அது கல்வி நிறுவனம். எனவே கல்லூரிகளில் நடைபெறும் நியமங்களுக்கு அறநிலையத்துறை சட்டம் பொருந்தாது, எனவே மதத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய முடியாது என்று வாதிட்டார்.

“அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்”, இந்த கல்லூரி “கோவில் நிதி மூலமாக” துவங்கப்பட்டுள்ளது. அரசின் எந்த நிதி உதவியும் இன்றி, தனித்து முழுமையாக கோவில் நிதியிலும், கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கட்டணத்தினாலும் பெறப்படும் நிதியில் செயல்படுகிறது, எனவே இதற்கு அறநிலையத்துறை சட்டம் பொருந்தும் என்று வாதிட்டார்.

இரு தரப்பினர் வாதத்தையும் கேட்ட “நீதிபதி விவேக்குமார் சிங்” அவர்கள், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில் மற்றும் மாணவர்கள் மூலம் பெற படும் நிதியில் இயங்கும் ஒரு “சுயநிதி கல்லூரி” என்பதாலும், கல்லூரி கோவில் மூலம் தொடங்கப்பட்டது என்பதாலும், மத நிறுவனம் என்ற வரையறைக்குள் வருகிறது. எனவே “கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்” எந்த நியமனம் நடந்தாலும், பணிக்கு சேர்பவர் “ஹிந்து மதத்தை” பின்பற்றுபவராக மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Exit mobile version