ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி!

0
197
Only Night 547 Vehicles! Police Action!

ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி!

கொரோனா தொற்றானது முடிவடைந்த நிலையில் மீண்டும் அத்தொற்று ஒமைக்ரான் ஆக உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கையை அமல்படுத்தி வருகின்றன. டெல்லி ,ஹரியானா ,கோவா, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் மக்களின் நலனை கருதி ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். அந்தந்த மாநிலங்களின் தோற்று பாதிப்பிற்கு ஏற்ப வார இறுதியில் முழு ஊரடங்காகவும் ,இரவு ஊரடங்காகவும் அமல்படுத்தி உள்ளனர். சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நமது தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. நமது தமிழகத்தில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.இந்நிலையில் நேற்று இரவு ஊரடங்கின் போது ஊரடங்கு போட்டதை மீறி வாகனங்களில் வெளியே நடமாடிய 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 501 இருசக்கர வாகனங்கள் ஆகும். மீதம் 32 ஆட்டோக்கள் மற்றும் 14 இலகுரக வாகனங்களை பறிமுதல் செய்தனர். தமிழக அரசு மக்களின் நலனுக்காக ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. மக்கள் அதனை சிறிதும் புரியாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதனால் தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கும். மீண்டும் முழு ஊரடங்கு போடும் நிலைக்கு நாமே வழிவகுத்து விடுவோம். அதுமட்டுமின்றி இந்த இரவு ஊரடங்கு இன் போது பால் வினியோகம் பத்திரிகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்ல மட்டுமே வாகனங்களுக்கு மட்டுமே  தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைப்போல முகக்கவசம் அணியாமல் நடமாடும் மக்களை கண்டும் அபராதம் வாங்கி வருகின்றனர். மக்கள் ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பை உணர்ந்து அரசாங்கம் கூறும் விதிமுறைகளை சரியான வகையில் கடைப்பிடிக்க வேண்டும்.