ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!!

0
125

ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!!

ஒவ்வொரு நாளும் மாத்திரைகளின் எண்ணிக்கையும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் உட்காரும்போதும் எழுந்திருக்கும் போதும் உடம்பில் வலி ஏற்படுவது, சிறிய வயதிலும் மூட்டு வலி முழங்கால் வலி மூட்டு ஜவ்வு தேய்ந்து விடுதல், என்று பல வலிகளால் தினந்தோறும் ஏராளமானோர் சிரமப்படுகின்றனர்.

இது போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் வயதாவதால் ஏற்படும். எனவே ஜங்க் ஃபுட் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

தண்ணீரை நிறுத்தி நிதானமாக பொறுமையாக குடிக்க வேண்டும். இவ்வாறு உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து வலிகளையும் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

செய்முறை:
இதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது வால்நட். இந்த வால்நட்டானது நம் மூட்டுகளில் இருக்கக்கூடிய ஜவ்வை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் இரண்டு வால்நட் நாம் சாப்பிடுவதால் முழங்கால் மூட்டுகளில் இருக்கக்கூடிய ஜவ்வை இயற்கையாகவே அதிகப்படுத்தும்.

இது புரோட்டின் கார்போஹைட்ரேட் கால்சியம் வைட்டமின் என்று ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வால்நட்டை இரவு தூங்குவதற்கு முன் இரண்டை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் குடித்து வர அசிடிட்டி பிரச்சனை தீரும்.

இதனுடன் இன்னொரு முக்கியமான பொருள்தான் பாரிஜாதம். இந்த பாரிஜாத செடியின் இலைகள் நம் மூட்டு வலியை முற்றிலுமாக குறைக்கிறது. இதில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் வேறு எந்த செடியிலுமே இருக்காது. வாத தோஷம் அதிகமாக இருப்பவர்கள் இந்த கசாயத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த கசாயத்தை செய்ய முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். பிறகு பாரிஜாத இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தூசுகள் மண் எதுவும் இல்லாமல் நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். இந்த கழுவிய இலைகளை சூடான அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

மேலும் இதனுடன் ஒரு பிரியாணி இலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக இதனுடன் சிறிதளவு பட்டையை சேர்த்துக் கொள்ளவும். இந்த பட்டையில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் முழங்கால் மற்றும் மூட்டுகளில் இருக்கக்கூடிய வலியை குறைக்கிறது. இதையெல்லாம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இப்போது கொதிக்க வைத்த இந்த கஷாயத்தை வடிகட்டி விடவும். இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் தினமும் ஒரு மாதத்திற்கு குடிக்கவும். கீழ்காலில் முழங்காலில் மூட்டுகளில் இருக்கக்கூடிய ஈர்ப்பை இது நிச்சயமாக அதிகப்படுத்தும்.

மேலும் இந்த பாரிஜாத இலைகளுக்கு நரம்பு வலி மற்றும் நரம்பு அடைப்புகளை குணப்படுத்தக்கூடிய மிகப்பெரிய சக்தியும் உள்ளது.இதை குடிப்பதால் நாள் முழுவதும் ஆரோக்கியமாக நம்மால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.