இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் பிற விமான நிலையங்களில் குறிப்பிட்ட சிலருக்கு அதாவது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய மற்றும் அந்த பிரிவுகளில் உள்ளடக்கி இருக்கக்கூடியவர்களுக்கு விமானத்தில் ஏறுவதற்கு நேரடியாக அவர்களுடைய கார் விமானத்தின் அருகிலேயே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
பொதுவாகவே விமான நிலையம் என்றால் பாதுகாப்பு குறித்த பல சோதனைகள் இடம்பெறும். விமானத்தில் ஏறுவதற்கு பயணிகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட நேரடியாக விமானத்தின் அருகிலேயே காரில் சென்று இறங்கக் கூடிய அளவிற்கு இந்தியாவில் தகுதி உடையவர்களாக பார்க்கப்படுகிறவர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
முதல் பிரிவு :-
✓ இந்திய குடியரசுத் தலைவர்
✓ துணை குடியரசு தலைவர்
✓ பிரதமர்
✓ வெளிநாடுகளின் குடியரசு தலைவர்கள்
✓ வெளிநாடு அரசுகளின் தலைவர்கள்
இவர்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச மற்றும் மற்ற விமான நிலையங்களிலும் நேரடியாக விமானத்திற்கு சென்று எந்தவித சோதனைகளும் இல்லாமல் விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் இவர்கள் தங்களுடைய குடும்பங்களையும் அழைத்து செல்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது பிரிவு :-
✓ இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி
✓ முன்னாள் பிரதமர்
✓ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
✓ மக்களவை சபாநாயகர்
✓ ஜனாதிபதியின் மனைவி
✓ துணை ஜனாதிபதியின் மனைவி
✓ வெளிநாட்டு தூதர்
இவர்களுக்கும் முதல் பிரிவினரை போலவே சர்வதேச மற்றும் மற்ற விமானங்களில் செல்வதற்கான அனுமதி இருந்தாலும் இவர்கள் தன்னுடன் யாரையும் அழைத்து செல்லக்கூடிய வசதியானது இந்த இரண்டாவது பிரிவில் கிடையாது.
மூன்றாவது பிரிவு :-
✓ மாநில கவர்னர்கள்
✓ யூனியன் பிரதேசங்களின் துணை கவர்னர்கள்
✓ முதலமைச்சர்
இவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள விமான நிலையங்கள் எந்தவித சோதனைகளும் இன்று பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.