கசப்பு நிறைந்த காய்களில் பாகற்காய் அதிக ஊட்டச்சத்துக்கள கொண்டுள்ளது.மாங்கனீஸ்,பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு,புரதம்,சோடியம்,வைட்டமின்கள்,துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது.
பாகற்காயை உணவாக எடுத்துக் கொண்டால் குடற்புழு மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் மருந்தாக இது திகழ்கிறது.உடல் எடை இழப்பில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இரத்தத்தில் உள்ள அழுக்கு கிருமிகளை அப்புறப்படுத்தும் வேலையை பாகற்காய் செய்கிறது.கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றுகிற உதவுகிறது.செரிமானம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணமாக்குவதோடு புற்றுநோய் செல்களை அழிக்கிறது.இவ்வளவு நன்மைகள் கொண்டிருக்கும் பாகற்காய் சிலருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருக்கிறது.
சர்க்கரை(நீரிழிவு) நோய்க்கு மருந்தாக திகழும் பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் அது இரத்த சர்க்கரை அளவை குறைத்துவிடும்.சர்க்கரை அளவு அதிகரிப்பது எவ்வளவு ஆபத்தோ அதேபோல் சர்க்கரை அளவு குறைவதும் ஆபத்து தான்.எனவே இரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிட்டால் அது கருச்சிதைவை உண்டாக்கிவிடும்.கல்லீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அளவிற்கு அதிகமாக பாகற்காய் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.எனவே பாகற்காய் நல்லது என்றாலும் அதை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.