ஐயோ போச்சு! அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

0
146

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட மறுபுறம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய துன்பமாக இருந்து வருகிறது.

ஒருபுறம் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபுறம் தங்களுடைய வயல்களில் தாங்கள் செய்திருந்த பயிர்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், அந்த பயிர்கள் அழுகும் நிலையில் இருந்து வருகின்றன விவசாயிகள் கவலை அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சற்றேறக்குறைய ஒரு வார காலமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது அதாவது இந்த முறையானது ஒரே சமயத்தில் அனைத்து இடங்களிலும் பெய்வது கிடையாது.

ஒரு பகுதியில் பெய்தால் மற்றொரு பகுதியில் பெய்வதில்லை. இன்னொரு பகுதியில் செய்தால் மற்றொரு பகுதியில் பெய்வதில்லை. இப்படி மாறி, மாறி, தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

இதற்கு நடுவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் அதன் எதிரொலியின் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சற்றேறக்குறைய 30 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

அதனடிப்படையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ,சேலம், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல், நீலகிரி மற்றும் வேலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மன்னார் வளைகுடா கடல், தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ற காரணத்தால், மீனவர்கள் அந்த கோவிலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.