கோடை காலம் துவங்கிய நிலையில் மலை பிரதேசங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு பொதுமக்கள் படையெடுப்பு செய்வது சாதாரண விஷயம் தான் ஆனால் அப்பொழுது ஏற்படக்கூடிய கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் இன்னும் சில முக்கிய காரணங்களுக்காக உயர் நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டுக்கான முக்கிய கோடை சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து முக்கிய முடிவை வெளியிட்டிருக்கிறது.
நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இரண்டிற்கும் எத்தனை சுற்றுலா வாகனங்கள் வருகிறது என்பது குறித்த ஆய்வினை சென்னை ஐஐடி மற்றும் பெங்களூர் நிறுவனம் இணைந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.
இந்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையிலும் கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் எத்தனை வாகனங்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு அனுமதிக்கபடனும் எனவும் அங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கான கட்டுப்பாடுகள் என்ன என்பதையும் தெளிவாக விவரித்து இருக்கின்றனர்.
அதன்படி, ஊட்டி :-
✓ வார நாட்களில் – 6000 வாகனங்கள்
✓ வார இறுதி நாட்களில் – 8000 வாகனங்கள்
கொடைக்கானல் :-
✓ வார நாட்களில் – 4000 வாகனங்கள்
✓ வார இறுதி நாட்களில் – 6000 வாகனங்கள்
மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், உள்ளூர் வாசிகள் மற்றும் விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்காக எடுத்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.